தருமபுரி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட தேர்தல் பணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் அரூரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் எம்.இம்ரான் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர்கள் எஸ்.நாகராஜ் பாபுபாய் இளைஞரணி மாவட்ட செயலாளர் அசாரூதின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக அக்கட்சியின் மாநில துணை செயலாளர் ஏ.ஜெ.எஸ்.தாஜீதீன் கலந்துகொண்டு தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மேலும் அவர் பேசுகையில் கரூரில் 43 பேர் விஜயால் இறந்திருக்கிறார்கள், அவர்களால் அவர்களின் கூட்டத்தையே கட்டுப்படுத்த முடியவில்லை இவர்களை யார் நாட்டை கட்டுப்படுத்த போகிறார்கள் என விஜய் கடுமையாக விமர்சித்தார். மேலும் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி வேட்பாளர்களையும் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சியினர் உழைக்க வேண்டும் என்றும் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கூட்டத்தில் உரையாற்றினார்.கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அரூர் பகுதியில் தொழில் பேட்டை அமைக்க வேண்டும்ஓகேனக்கல் உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்ஈச்சம்பாடி அணை நீரேற்றும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்அரூர் பகுதியில் தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் அரசு சேகோ தொழிற்சாலை அமைத்து தர வேண்டும்.உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டனஅரூர் பகுதியில் வேளாண்மை கல்லூரி அமைக்க வேண்டும்பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு கால்வாய்களை நீட்டித்து பாசன வசதி செய்து தரவேண்டும்வாணியாறு வள்ளிமதுரை அணைகளில் உள்ள பூங்காங்களை சீரமைத்து சுற்றுதலமாக மாற்ற வேண்டும் வீடற்ற இஸ்லாமியர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கி அதில் கலைஞர் கனவு இல்லம் வீடு கட்ட அனுமதி வழங்க வேண்டும் வக்பு வாரிய சொத்துகள் குறித்து கணக்கீட்டு முறையாக பயன்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. Related Link 16-வது நாளாக தொடர் போராட்டம்