யாருக்கு என்ன பொறுப்பு வழங்க வேண்டும் என்பது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியும் என திமுக M.P. கனிமொழி தெரிவித்தார். சென்னை மயிலாப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு எழுத்தாளர் புதுவை இளவேனில் எழுதிய நூலினை வெளியிட்டார். இதனை தொர்ந்து, செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், துணை முதலமைச்சர் பொறுப்பில் உதயநிதி ஸ்டாலின் மிகச் சிறப்பாக செயல்பட வேண்டும் என வாழ்த்தினார்.