திடீரென காணாமல்போன மாற்றுத்திறனாளி இளைஞர். அடித்துக் கொன்று இளைஞரின் சடலத்தை செப்டிங் டேங்கில் கயிறுகட்டி இறக்கிய இரண்டு மாற்றுத்திறனாளிகள். 2 வாரத்திற்குபிறகு வெளிவந்த உண்மை. மாற்றுத்திறனாளி இளைஞரை இரண்டு மாற்றுத்திறனாளிகள் அடித்துக் கொலை செய்தது ஏன்? கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் சிக்கினார்களா?காணாமல்போன இளைஞர் குறித்து விசாரணைஒருநாள்கூட லீவு போடாம வேலைக்கு வந்துட்டு இருந்த இளைஞர் திடீர்னு ஒருவாரத்துக்குமேல ஆளையே காணோம். யார்கிட்டயும் எந்த தகவலும் சொல்லாததால கூட வேலை பாத்த நபர்கள் இளைஞரோட சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி விசாரிச்சிருக்காங்க. அப்பதான், இளைஞரை காணோம் அப்டிங்குற தகவல் அவங்க உறவினர்களுக்கே தெரிஞ்சிருக்குது. அடுத்து, அங்க இருந்து கிளம்பி நேர்ல வந்த இளைஞரோட உறவினர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்துருக்காரு. ஆனா, அந்த கம்ப்ளைண்ட்ட காவல்துறை கண்டுக்கல. அடுத்து, நீதிமன்றத்துக்குப்போய் ஆட்கொணர்வு மனு தாக்கல் பண்ணிருக்காங்க இளைஞரோட உறவினர்கள். அடுத்துதான், வழக்கே சூடுபிடிக்க ஆரம்பிச்சது. முதற்கட்டமா காணாமபோன இளைஞரோட செல்போன் எண்ணுக்கு யாரெல்லாம் அடிக்கடி பேசிருக்காங்க? அதிக நேரம் பேசின நபர்கள் யாரு? கடைசியா யாரு பேசிருக்காங்கனு எல்லாத்தையுமே செக் பண்ணிருக்காங்க போலீசார். அதுல இளைஞரோட வேலை பார்த்த ஒருத்தரும், அவரோட மனைவியும்தான் அடிக்கடி வீடியோ கால் பேசிருந்ததும் தெரியவந்தது. அதேமாதிரி, இளைஞர்கூட வேலை பார்த்த நபரோட செல்போனை, கடந்த பத்துநாளா இன்னொரு இளைஞர் பயன்படுத்திட்டு இருந்ததும் தெரியவந்துச்சு. அதனால, அந்த 3 பேர்கிட்டயுமே விசாரிச்சிருக்காங்க போலீசார். அந்த 3 பேருமே வாய்பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி அப்டிங்குறதால அவங்களுக்கு புரியுறமாதிரி விசாரிக்கக்கூடிய நபர்களை வச்சி விசாரணை நடத்திருக்காங்க போலீசார். அப்பதான், பல அதிர்ச்சி தகவல்கள் எல்லாம் வெளியவந்துச்சு.லாரன்ஸ் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த மகேந்திரன்தென்காசியை சேர்ந்த 26 வயசான இளைஞர் மகேந்திரன் சென்னை பாடியில உள்ள ஒரு பிரபல துணிக்கடையில பேக்கிங் பிரிவுல கடந்த 8 வருஷமா வேலை பாத்துட்டு இருந்துருக்காரு. 18 வயசுலயே வேலைக்கு சேர்ந்த மகேந்திரன் காது கேக்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. கல்யாணம் ஆகாத மகேந்திரன்கூட திருவள்ளூர் புட்லூர் கட்டபொம்மன் தெருவை சேர்ந்த லாரன்சும் வேலை பாக்குறாரு. லாரன்ஸ், அவரோட மனைவி வசந்தி ரெண்டுபேருமே காது கேக்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிதான். மகேந்திரனும், லாரன்சும் நட்பா பழகிருக்காங்க. அதனால, லாரன்ஸ் வீட்டுக்கு அடிக்கடி போய் வந்துருக்காரு மகேந்திரன். அப்படி போனதுதான் கடைசியில அவரோட உயிருக்கே ஆபத்தா முடிஞ்சிருக்கு.மகேந்திரனுக்கும், லாரன்ஸின் மனைவிக்கும் தகாத உறவுமகேந்திரனுக்கும், லாரன்ஸோட மனைவிக்கும் தகாத உறவு ஏற்பட்ருக்குது. அத, ஒருநாள் நேர்ல பாத்த லாரன்ஸ் எனக்கே துரோகம் பண்றயா? இனி எங்க வீட்டுக்கே வராதனு நண்பன்கிட்ட சொன்னதோட, நமக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க, அவங்களோட எதிர்காலமே வீணாகிரும்னு தன்னோட மனைவியையும் கண்டிச்சிருக்காரு. அந்த கண்டிப்பை எல்லாம் கண்டுக்காத ரெண்டுபேரும் தகாத உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இல்ல. லாரன்ஸ் இல்லாதநேரத்துல வீட்டுக்குப்போய் அவரோட மனைவிகூட தனிமையில இருந்துருக்காரு மகேந்திரன். அதப்பாத்தும் பாக்காதமாதிரி வெளிய வந்த லாரன்ஸ், மறுநாள் மகேந்திரனை மது குடிக்க அழைச்சிட்டு போயிருக்காரு. நமக்குள்ள இருக்குற பிரச்சனையை பேசி முடிச்சிக்கலாம்னு சொன்ன லாரன்ஸ் கூடவே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி நண்பன் வேதநாயகத்தையும் அழைச்சிட்டு போயிருக்காரு. மகேந்திரனுக்கு மூக்குமுட்ட மதுவை ஊத்திக்குடுத்து குடிக்க வச்ச லாரன்சும், வேதநாயகமும் அடிச்சே கொலை செஞ்சிருக்காங்க. அடுத்து, தன்னோட செல்போன வைத்தியநாதன்கிட்ட குடுத்த லாரன்ஸ் மகேந்திரனோட சடலத்த கயிறு கட்டி செப்டிக் டேங்க்ல போட்டு அடைச்சிட்டாரு.லாரன்ஸ், வேதநாயகம் இருவரையும் கைது செய்த போலீஸ்இந்த கொலை நடந்தது டிசம்பர் ஆறாந்தேதி. அதுக்குப்பிறகு லாரன்ஸ் வழக்கம்போல வேலைக்குப்போக ஆரம்பிச்சிட்டாரு. ஆனா, மகேந்திரனை மட்டும் காணேவே இல்ல. கூட வேலை பாக்குறவங்க மகேந்திரனை பத்தி விசாரிச்சப்ப சொந்த ஊருக்குபோயிருக்குறதா சைகை காட்டிருக்காரு லாரன்ஸ். ஊருக்குப்போனா சொல்லாம போகமாட்டாரேனு நினைச்ச மற்ற ஊழியர்கள் சொந்தக்காரங்களுக்கு போன் பண்ணி விசாரிச்சிருக்காங்க. அதுக்குப்பிறகுதான் போலீசார் விசாரணையில ஒட்டுமொத்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்துருக்குது. அடுத்து, செப்டிங் டேங்க்ல இருந்து மகேந்திரனோட சடலத்த மீட்ட போலீசார் போஸ்ட் மார்டத்துக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அதேமாதிரி லாரன்ஸையும், வேதநாயகத்தையும் கைது செஞ்ச போலீசார் லாரன்ஸோட மனைவிகிட்டயும் விசாரணை நடத்திட்டு இருக்காங்க. Related Link இரவு 10 மணிக்கு மேல் கடை வைப்பதா?