மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இக்கோவிலில் கடந்த 19ஆம் தேதி தீமிதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழாவில் விரதமிருந்த பக்தர்கள், மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்து தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு மதுரை மீனாட்சி அம்மன் அலங்காரத்தில் அருள்பாலித்த திரௌபதி அம்மனை தரிசித்து சென்றனர்.