திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரவு நேரத்தில் மதுபோதையில் தர்ணாவில் ஈடுபட்ட ராணுவ வீரர், எழுந்து செல்லுமாறு கூறிய கலால் பிரிவு இளநிலை உதவியாளரை கன்னத்தில் அறைந்ததால் கைது செய்யப்பட்டார்.அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றி வரும் சந்திரபுரம் பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் இளவரசன், விடுமுறையில் ஊருக்கு வந்த நிலையில் சிக்கன் கடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.இது குறித்து புகாரளிக்க மதுபோதையில் இரவு 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்திற்கு சென்று தர்ணா செய்த அவர், அங்கு பணியில் இருந்த கலால் பிரிவு இளநிலை உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி அப்புறப்படுத்த முயன்றதால் கன்னத்தில் அறைந்தார்.தகவலறிந்து வந்த போலீசார் இளவரசனை கைது செய்தனர். அவரது உறவினர் ஒருவர் செய்தியாளரின் செல்போனை பிடுங்கியதால் சல சலப்பு ஏற்பட்டது.