நெல்லையில் விடாமுயற்சி திரைப்படம் வெளியான திரையரங்க வளாகத்தில் தவெக கொடியுடன் வந்த நபரை அஜித் ரசிகர்கள் கண்மூடித் தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தியேட்டர் முன்பு தவெக கொடியுடன் அந்த நபர் ஆடிக்கொண்டிருந்ததால், கோபமடைந்த அஜித் ரசிகர்கள், கொடியை பறித்ததோடு அவரை தாக்கினர்.