திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் அதிகாலையிலே நடைதிறக்கப்பட்டு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் கால பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் காலை முதலே கடலில் புனிதநீராடிய பக்தர்கள் 6 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.