Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும், கடற்கரை பகுதியில் அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில், பரிவேட்டைக்கு வெள்ளை குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோயில்களில் கடற்கரை பகுதியில் அமைந்திருக்கும் பகவதி அம்மன் கோயிலும் ஒன்று.
இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழா கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான, பரிவேட்டை திருவிழா இன்று பிற்பகல் தொடங்கியது. காலையில் கொலு மண்டபத்தில் இருந்து வெளிப்பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் எலுமிச்சை பழ மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து கோயிலில் இருந்து மகாதானபுரம் நோக்கி அம்மன் பரிவேட்டைக்கு ஊர்வலமாக புறப்பட்டார். அப்போது துப்பாக்கி ஏந்திய போலீசார் அணிவகுப்பு மரியாதை உடன் அம்மன் பரிவேட்டைக்கு புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

யானை முன்பு ஊர்வலமாக வர, பின்பு முத்துக்குடை ஊர்வலத்துடன் அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு வந்தார். நூற்றுக்கணக்கான கிராமிய கலைஞர்களின் பஞ்ச வாத்தியம், கேரள புகழ் சிங்காரி மேளம், செண்டை மேளம், ஒயிலாட்டம், கோலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved