குலசேகரப்பட்டணம் தசரா விழாவிற்காக, ஏரலில் களை கட்டிய ஜடாமுடி மற்றும் தசரா பொருட்களின் வியாபாரத்தால், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா உலகப் புகழ் பெற்றதாகும். வரும் அக்டோபர் 2ஆம் தேதி, தசரா நடைபெற உள்ள நிலையில் 48 நாட்களுக்கு முன்பாகவே காளி வேடம் அணியும் பக்தர்கள், தசரா பறை எனும் குடில் அமைத்து ஒவ்வொரு ஊரிலும் விரதம் இருப்பது வழக்கம்.தூத்துக்குடி மாவட்டத்தில், தசரா வேடங்கள் அணிவதற்கு ஏற்ற பொருட்கள் அதிகமாக விற்பனையாகும் இடம் ஏரல் மட்டுமே. இங்கு தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் பல்வேறு ஊரைச் சேர்ந்த வேடமணியும் பக்தர்கள் இங்கு வந்து பொருட்கள் வாங்குவது வழக்கம். தற்போது, ஏரல் பஜாரில் ஜடாமுடி மற்றும் விற்பனை செய்யும் கடைகள் தசரா பொருட்கள் விற்பனை கடைகளில் வியாபாரம் களை கட்டி உள்ளது.