விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆளில்லா விமானம் மூலம் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன. மாரங்கியூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மழையால் துண்டிக்கப்பட்டது. இதனால் வெளியில் வரமுடியாமல் தவித்து வந்த மக்களுக்கு பால் உள்ளிட்ட பொருட்கள் ட்ரோன் மூலம் காவல்துறையினர் வழங்கினர்.