news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருமணமான மூன்றே மாதத்தில் மரணம்
tv

Also Watch

tv

Read this

திருமணமான மூன்றே மாதத்தில் மரணம்

இரும்புலியூர், செங்கல்பட்டு

40

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை சித்ரவதை செய்த கணவன். சந்தேக புத்தியால் தினம் தினம் டார்ச்சர். தான் அனுபவித்த கொடுமைகளை உருக்கமாக பதிவிட்டு விபரீத முடிவு. நடந்தது என்ன?

* இளம்பெண் விபரீத முடிவு என தகவல்
* சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை
* போலீஸ் விசாரணையில் வெளிவந்த உண்மை

பக்கத்து வீட்டுல உள்ள இளம்பெண் திடீர்னு தூக்கு போட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாங்க சார், அப்படீன்னு அக்கம் பக்கத்துல உள்ளவங்க போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் சொல்லிருக்காங்க. உடனே சம்பவ இடத்துக்குப் போன போலீஸ், இளம்பெண்ணோட சடலத்த கைப்பற்றி போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அப்போதான், அந்த இளம்பெண் கையில இருந்த டாட்டூவ போலீஸ் கவனிச்சிருக்காங்க. என்ன எழுதிருக்காங்கன்னு பாத்தப்போதான், இளம்பெண்ணோட தற்கொலைக்கு பின்னாடி இருக்குற அந்த கொடூரமான விஷயத்த பத்தி தெரியவந்திருக்கு.

* காதல் திருமணம் செய்த அருண்குமார் - அபிநயா
* மனைவி அபிநயா மீது அருண்குமாருக்கு சந்தேகம்
* சந்தேக புத்தியால் மனைவியை துன்புறுத்திய அருண்குமார்


செங்கல்பட்டு, இரும்புலியூர சேர்ந்த 30 வயசான அருண்குமாருக்கும், திருவள்ளூர சேர்ந்த அபிநயாவுக்கும் கடந்த நவம்பர் மாசம் கல்யாணம் நடந்திருக்கு. அபிநயா ஐடி ஆஃபிஸ்ல வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. கல்யாணம் முடிஞ்ச கொஞ்ச நாள் கணவனும் மனைவியும் சந்தோஷமா வாழ்ந்துட்டு இருந்தாங்க. ஆனா, அதுக்கப்புறம் அபிநயாவோட வாழ்க்கையில சந்தோஷம் அப்டிங்குற ஒரு சேப்டரே காணாம போய்ருச்சு. ஏன்னா, கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ஒரு முகத்த காட்டுன அருண்குமார், அபிநயா கழுத்துல தாலி ஏறுன சில நாட்களிலேயே வேற முகத்த காட்டிருக்கான். நான் கவர்மெண்ட் வேல பாக்குறேன், என் ரேஞ்சுக்கு ஏத்த மாதிரி நகை பணம்லாம் குடுக்கனும், போய் உங்க அம்மா வீட்டுல வாங்கிட்டு வான்னு சொல்லி, மனைவிய டார்ச்சர் பண்ணதா சொல்லப்படுது. இது ஒரு பக்கம் இருக்க, மனைவியோட நடத்தை மேல அருண்குமாருக்கு சந்தேகம் வந்திருக்கு. எதுக்கெடுத்தாலும், எது பண்ணாலும் அபிநயாவ சந்தேகப்பட்டு துன்புறுத்திட்டே இருந்துருக்கான்.

* கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு
* செல்போனில் கேம் விளையாடி கொண்டிருந்த அபிநயா
* வேறொருவருடன் மெசேஜ் செய்வதாக நினைத்த அருண்
* கணவன் அருணிடம் சண்டையிட்ட மனைவி அபிநயா


சில நாட்களுக்கு முன்னாடி, கணவன் - மனைவிக்கு இடையில பயங்கர தகராறு ஏற்பட்டிருக்கு. செல்போன எடுத்தாலே யார் கூட பேசுற, யாருக்கு மெசேஜ் பண்றன்னு கேட்டு சண்ட போட்டுருக்காரு. வீட்டு பக்கத்துல உள்ள கடைக்கு போனா கூட, கடையில யார் இருந்தா, யார் கூடலாம் பேசுனன்னு ஆயிரம் கேள்வி கேட்டு டார்ச்சர் பண்ணதா சொல்லப்படுது. அபிநயா மேல அருண்குமாருக்கு உள்ள சந்தேகத்துனால, கணவன் - மனைவிக்குள்ள அடிக்கடி தகராறு வந்துருக்குது. இதுக்கு நடுவுல, சம்பவத்தன்னைக்கு முன்னாடி நாள் நைட்டு, அபிநயா ஃபோன்ல கேம் விளையாடிட்டு இருந்துருக்காங்க. அப்ப, பக்கத்துல தூங்கிட்டு இருந்த அருண்குமாருக்கு திடீர்னு முழிப்பு தட்டவே, மனைவி யாருடையோட மெசேஜ் பண்ணிட்டு இருக்குறதா நினைச்சு அவங்களுக்கு தெரியத மாதிரி எட்டி பாத்துருக்கான்.

* வழக்கம்போல் பணிக்கு புறப்பட்டு சென்ற கணவன்
* மனைவி அபிநயாவுக்கு ஃபோன் செய்த அருண்குமார்
* விபரீத முடிவெடுத்த அபிநயா


கணவன் அப்படி பண்ணதும் ஆத்திரமடைஞ்ச அபிநயா பயங்கரமா சண்ட போட்டுருக்காங்க. அதுக்குப்பிறகு, மறுநாள் காலையில் அருண்குமார் வழக்கம்போல வேலைக்கு கிளம்பி போக, மனைவி அபிநயா ரூம்ல தூங்கிட்டு இருந்துருக்காங்க. அதுக்கப்புறம், 9 மணியளவுல அருண்குமார், அபிநயாவுக்கு ஃபோன் பண்ணிருக்கான். ஆனா, அந்த ஃபோன் கால்ல அவங்க எடுக்கல. பலமுறை ஃபோன் பண்ணியும் எடுக்காததால், தன்னோட அப்பாவுக்கு ஃபோன் பண்ணி அபிநயாக்கிட்ட கொடுக்க சொல்லிருக்கான். அபிநயாவோட ரூம்ம ரொம்ப நேரமா தட்டி பாத்தும் எந்த ரெஸ்பான்ஸும் வராததால, அக்கம்பக்கத்துல உள்ளவங்க உதவியோட கதவ உடைச்சிருக்காங்க. அங்க அபிநயா தூக்குல தொங்கி சடலமா கிடந்தத பாத்து மொத்த குடும்பமே அதிர்ச்சியாகிருக்கு.

* செல்போனில் இருந்த மெசேஜை வைத்து விசாரணை
* மகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தந்தை புகார்
* அபிநயாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் விசாரணை


இந்த விஷயம் கேட்டதும், உடனே வீட்டுக்கு கிளம்பி வந்த அருண்குமார் மனைவியோட சடலத்த பாத்து கதறி அழுதுருக்கான். அடுத்து, அங்க வந்த போலீஸ்காரங்க, அபிநயா எதுக்காக தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு தெரிஞ்சிக்க விசாரணையில இறங்குனாங்க. முதற்கட்டமா அவங்களோட செல்போன எடுத்து செக் பண்ணப்போதான் அபிநயாவோட விபரீத முடிவுக்கு என்ன காரணம்னு தெரியவந்துச்சு. அவங்க ஃபோன்ல, அபிநயா தன்னோட கணவன் மேல எந்த அளவுக்கு பாசம் வச்சுருந்தாங்கன்னு அந்த மெஸேஜ படிச்சு பாத்தப்ப தான் போலீஸ்க்கு தெரியவந்துருக்கு. டாட்டூல உன்னோட பேர எழுதுனா அழிஞ்சுடும்-ங்குறதுக்காக, உன் பெயர ரத்தம் சொட்ட சொட்ட ஊசியால என் கையில குத்தி எழுதி வச்சேன், ஆனா நீயே என்னைய நம்பாம சந்தேகப்பட்டு சித்ரவதை பண்ணி என்ன இந்த தற்கொலை முடிவ எடுக்க வச்சுட்டன்னு உருக்கமா மெஸேஜ் அனுப்பிருந்துருக்காங்க. இந்த சூழலல, மகளோட மரணத்துல சந்தேகம் இருக்குறதா சொல்லி அபிநயாவோட அப்பா கொடுத்த புகார் அடிப்படையில வழக்குப்பதிவு பண்ணி விசாரணை நடத்திட்டு இருக்காங்க.

Related Link
கணவன் கதையை முடித்த மனைவி

கணவன் கதையை முடித்த மனைவி

              

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
9 hrs 31 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved