ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில், புரட்டாசி மாதம் மற்றும் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர். திதி, தர்ப்பணம் கொடுப்பது, பரிகார பூஜைகள் செய்வதற்கு புரட்டாசி உகந்த மாதம் என்பதாலும், வரும் புதன்கிழமை புரட்டாசி மாத மஹாளய அமாவாசை வருவதாலும், முன்கூட்டியே பவானி கூடுதுறையில் திரண்ட மக்கள், பரிகார பூஜைகளை செய்தும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தும் வழிபாடு செய்தனர். மேலும் காவிரி ஆற்றில் புனித நீராடி, சங்கமேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்தனர்.