கடற்கரையோரம் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த ஆண். சாலையில் லோடு ஏற்றிக் கொண்டிருந்த டெம்போ டிரைவர் போலீசாரிடம் காட்டிய ஒற்றை போட்டோ. அந்த ஒற்றை போட்டோவால் சிக்கிய கொலையாளி. மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த நபர் யார்? கொலையாளிக்கும் உயிரிழந்த நபருக்கும் என்ன முன்விரோதம்? டெம்போ டிரைவர் காட்டிய போட்டோவில் இருந்தது என்ன? பைக் எண்ணை வைத்து விசாரணையில் இறங்கிய போலீசார்கடற்கரையில ஒருவர் உயிரிழந்து கிடக்குறதா போலீசுக்கு பொதுமக்கள் சிலர் போன் பண்ணி தகவல் சொல்லிருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் மர்மமான முறையில உயிரிழந்து கிடந்த நபரோட சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்காக ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சிருக்காங்க. அடுத்து, சடலம் கெடந்த இடத்துக்கிட்ட நின்ன பொதுமக்கள்கிட்ட விசாரணை நடத்திருக்காங்க. ஆனா, யாருக்கும் எந்த தகவலுமே தெரியல. இதுக்குமத்தியில போலீசாரை பார்த்ததும் கடற்கரைக்கு எதிர்முனையில உள்ள சாலையில இருந்து ஒரு டிரைவர் வேகவேகமா ஓடி வந்துருக்காரு. அடுத்து, அந்த டிரைவர்கிட்ட போலீசார் விசாரிச்சிருக்காங்க. அப்போ சார், உயிரிழந்து கிடக்குற நபரை அடிச்சிட்டு ஒருத்தரு பைக்ல வேகவேகமா போனதாகவும், அந்த பைக்கோட எண்ணை தான் போட்டோ எடுத்து வச்சிருக்குறதாகவும் சொல்லிருக்காரு அந்த டிரைவர். அதுக்குப்பிறகு, அந்த பைக்கோட எண்ணை வச்சி விசாரிச்சப்பதான் சில விஷயங்கள் தெரியவந்துச்சு.மகேஸ்வரனிடம் வம்பிழுத்த சுரேஷ்சென்னை, எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்தவர் 35 வயசான மகேஸ்வரன். இவரு, திருநங்கைகள்கிட்ட பாலியல் உறவு வைக்கிறதுக்காக நைட்நேரத்துல மதுபோதையில ராமகிருஷ்ணா கடற்கரைக்கு வந்துருக்காரு. ஆனா, அங்க திருநங்கைகள் யாருமே இல்லாததால டென்ஷன்ல ரொம்பநேரம் காத்துட்டு இருந்துருக்காரு. அப்போ, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ்ங்குறவரும் கடற்கரைக்கு போதையில வந்துருக்காரு. ஏற்கனவே போதையில சலம்பிட்டு இருந்த மகேஸ்வவரன்கிட்ட சுரேஷ் வம்பிழுத்திருக்காரு. அப்போ, திருநங்கைகள் கடற்கரைக்கு வராத கடுப்புல இருந்த மகேஸ்வரன், நீ எந்த ஏரியா? யார்கிட்ட வந்து ஒரண்டை இழுத்துட்டு இருக்குறனு சுரேஷோட கன்னத்துல பளார்னு அறைஞ்சிருக்காரு. அதுல, அவரு மயங்கி கீழே விழுந்ததும் கழுத்துல ஏறி மிதிச்சிருக்காரு மகேஸ்வரன். அதுக்குப்பிறகு, மூச்சுப்பேச்சு இல்லாம கிடந்த சுரேஷை தட்டி எழுப்பி பார்த்த மகேஷ்வரன், கடற்கரைக்கு எதிர்ல உள்ள சாலையில ஒரு டெம்போவுல லோடு ஏத்திட்டு இருந்த ஒரு டிரைவர்கிட்ட தண்ணி கேட்ருக்காரு. வண்டிக்குள்ள கிடந்த வாட்டர்பாட்டில்ல இருந்த தண்ணியை எடுத்து குடுத்துருக்காரு டிரைவர். மகேஸ்வரனை பிடித்த போலீசார்அந்த தண்ணியை வாங்கிட்டுப்போய், மயங்கி கிடந்த சுரேஷோட முகத்துல தெளிச்சி பாத்துருக்காரு. அப்படியும், அவரு எழும்பவே இல்ல. அடுத்து, தன்னோட பைக்கை எடுத்துக்கிட்டு விறுவிறுனு அங்க இருந்து கிளம்பி போய்ட்டாரு மகேஸ்வரன். அப்போ, ஏதோ நடக்குதுனு சந்தேகப்பட்ட டெம்போ டிரைவர் பைக்கோட எண்ணை மட்டும் போட்டோ எடுத்து வச்சிக்கிட்டாரு. இதுக்கு மத்தியிலதான், ஒரு ஆண் சடலம் கிடக்குறதா தகவல் தெரிஞ்சி அங்க வந்துருக்காங்க போலீசார். அப்பதான், வண்டி நம்பரை குடுத்துருக்காரு டெம்போ டிரைவர். அதுல, மகேஷ்வரனோட அட்ரஸை கண்டுபுடிச்சி அவரோட வீட்டுக்கேப்போய் சுத்தி வளைச்சி பிடிச்சிருக்காங்க போலீசார். அப்போ, சார் நான் கொலையே செய்யல, சும்மாதான் அடிச்சேன், ஆனா உசுரு போகும்னு நினைக்கலனு சொன்ன மகேஷ்வரன் காவல் வாகனத்துல ஏறமாட்டேனு அடம்பிடிச்சிருக்காரு. ஆனா, விடாம கைது பண்ணி கம்பி எண்ண வச்சிருக்காங்க காவல்துறையினர். Related Link நண்பரின் காதலிக்கு டார்ச்சர்