Also Watch
Read this
By: Fyrose Banu

காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக உறுதியாக இருப்பதாக கிரிஷ் சோடங்கர் கூறியது அவரது சொந்த கருத்து கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். 
திமுக, காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை துவக்கி வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் திமுக, காங்கிரஸ் கூட்டணி இணக்கமாக, வலிமையாக உள்ளதாக தெரிவித்தார்.

அது அவருடைய சொந்த கருத்து
காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்க தவெக உறுதியாக இருப்பதாக கிரிஷ் சோடங்கர் கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், அது அவருடைய சொந்த கருத்து எனவும், அப்படி எதுவாக இருந்தாலும் காங்கிரஸ் தேசிய தலைமை தான் முடிவெடுக்கும் எனவும் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved