கோவையில் கடந்த 20 ம் தேதி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்க மறுபுறம் அரங்கத்திலேயே தொண்டர்கள் இருவர் மது அருந்தும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமாரை கட்சியிலிருந்து நீக்குவதற்காக ஏற்பாடு செய்யபட்ட கூட்டத்திற்கு 200 ரூபாய் கொடுத்து கட்சியினரை அழைத்து வந்ததாக மூதாட்டி ஒருவர் கூறும் வீடியோ காட்சியும் வெளியானது.