திருப்பூர் மாவட்டம் குமரானந்தபுரம் அருகே விற்பனைக்காக வைத்திருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் ஒருவரை கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் வினோத் என்ற இளைஞரை கண்காணித்த போலீசார், அவரது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதை உறுதி செய்த பின் கையும் களவுமாக பிடித்தனர். மேலும் கஞ்சா சப்ளை செய்யும் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.