புரசைவாக்கம் சென்னை நடுநிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சமுதாய கல்லூரியில், மகளிர் முன்னேற்றத்திற்கான தொழில் பயிற்சியான தையல் மற்றும் கணினிப் பயிற்சியினை மேயர் பிரியா தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.இரண்டாம் கட்டமாக ஆழ்வார்பேட்டை சென்னை மேல்நிலைப் பள்ளியில் தொழிற் பயிற்சிக்கான சேர்க்கை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.