திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் தொற்று நோய் பரவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பொன்னேரி நகராட்சியில் மொத்தமுள்ள 27 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள் ஆரணி ஆற்றில் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.