தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-வின் மகன் 2.5 ஏக்கர் நிலத்தை மோசடி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கும்போது இறந்து போன தனது தந்தையை வைத்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ சின்னப்பனின் மகன் பிரித்விகுமார் போலியாக கிரய பத்திரம் செய்ததாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.