திருவள்ளூரில் பிரபல துணிக் கடையில் வணிகவரித்துறை அதிகாரிகள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். மோதிலால் தெருவில் ஸ்ரீகுமரன் டெக்ஸ்டைல்ஸ் முறையாக ஜிஎஸ்டி வரி செலுத்தவில்லை என புகார் எழுந்ததை தொடர்ந்து, அந்நிறுவனத்தின் 2 கிளைகளிலும் வணிக வரித்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து 4 கார்களில் வந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், கடைகளின் ஷட்டரை மூடிவிட்டு, கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டிருந்த தகவல்களை சேகரித்தனர். மேலும், கடை ஊழியர்களிடமும் விசாரணை நடத்திய அதிகாரிகள், கிடைக்கும் தகவல்களை பொறுத்து கடைக்கு சீல் வைக்கப்படுமா அல்லது அபராதம் விதிக்கப்படுமா என முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தனர்.