ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்று அறிக்கையில் வெளியிட்டுருந்தது தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அதை அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என செங்கோட்டையன் தெரிவித்தார்.