இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் LED திரையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒளிபரப்பு செய்யப்பட்ட போட்டியை ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.