பிளாஸ்டிக் லைட்டர்கள் தயாரிக்கும் உதிரி பாகங்களுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதை கோவில்பட்டியைச் சேர்ந்த நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் வரவேற்றுள்ளது. பிளாஸ்டிக் சீன லைட்டர்களின் வருகையால் தீப்பெட்டி தொழில் அடியோடு பாதிக்கும் நிலை ஏற்பட்டதாக அச்சங்கத்தினர் குற்றம்சாட்டினர்.