Also Watch
Read this
By: Fyrose Banu

வாலாஜாபேட்டை சென்னை பெங்களூர் சாலையில் அமைந்துள்ள இந்தியன் வங்கியில் தமிழக அரசு அறிவித்த மகளிர் உரிமைத்தொகை பணம் எடுக்க காலை முதலே வருகை தந்த முதியோர்கள் மற்றும் தாய்மார்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

காலை முதலே வங்கியில் குவிந்த தாய்மார்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 13-ஆம் வெள்ளிக்கிழமை அன்று மகளிர் உரிமைத் தொகையான 5,000 ரூபாய் மகளிர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார். இந்த பபணத்தை எடுக்க சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரு நாட்களில் விடுமுறை என்பதால் செவ்வாய்க்கிழமையான இன்று வாலாஜாபேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்கள் மற்றும் நகர் பகுதிகளில் இருந்து பெரும்பாலான மகளிர்கள் மற்றும் தாய்மார்கள், முதியோர்கள் என அனைவரும் ஒரே நேரத்தில் காலை முதலே வங்கியில் பணம் எடுக்க திரண்டனர்.

ரூ.5,000-ஐ கையில் காண்பித்தபடி மகிழ்ச்சி
வங்கி உள்ள பணியாளர்களை கொண்டு வெளியில் இருவரும் அமர்ந்தபடி பணம் பட்டுவாடா செய்யப்பட்ட நிலையில் நீண்ட வரிசையில் காத்திருந்த முதியோர்கள் மற்றும் தாய்மார்களிடம் ஆதார் அட்டை உள்ளிட்டவை காண்பித்து அதன் மூலமாக பதிவிறக்கம் செய்து அடுத்த நொடியே அனைவரும் பணத்தை பெற்று 5,000 ரூபாயை கையில் காண்பித்தபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved