மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில் பயனாளியிடம் லஞ்சம் வாங்கி வழக்கில் திருவாரூர் நகராட்சி பில்டிங் ஆய்வாளருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடாரம் கொண்டான் பகுதியில் இளங்கோவன் என்பவரிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக பில்டிங் ஆய்வாளர் நாகராஜன் கைது செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில், நீதிபதி தீர்ப்பளித்தார்.