news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி தீவிரம்
tv

Also Watch

tv

Read this

கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி தீவிரம்

தூத்துக்குடி

36

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பீச்1

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. கோயில் கடல் புனித தீர்த்தமாக கருதப்படுகிறது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். 
பக்தர்கள் விட்டு செல்லும் துணிகள்
இப்படி கடலில் புனித நீராட வரும் பக்தர்கள் தங்களது ஆடைகளை கடலில் விட்டு செல்வது மட்டும் அல்லாது கடற்கரையில் அதிகளவில் பிளாஸ்டிக் பொருட்களையும் போட்டு விட்டு செல்கின்றனர்.

கடற்கரையை தூய்மைபடுத்தும் பணி
இ.எஸ்.ஐ திட்டத்தின் 75-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இ.எஸ்.ஐ திருநெல்வேலி துணை மண்டலம் சார்பில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது. இதில் கடற்கரையில் கிடந்த மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளான பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டது.

பக்தர்கள், பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க கோரிக்கை
இந்தத் தூய்மை பணியில் 50 இ.எஸ்.ஐ பணியாளர்கள் ஈடுபட்டனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் ஏராளமான பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதால் பக்தர்களும், பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால் முழுமையாக குப்பைகள் அகற்றப்படும். மேலும் இ.எஸ்.ஐ.பயனாளிகளுக்கு மருத்துவம் மற்றும் நோய் கால பணபலன்கள் மட்டும் வழங்காமல் சமூக அக்கறையுடன் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்று இ.எஸ்.ஐ மருத்துவமனை திருநெல்வேலி துணை இயக்குனர் விஜயன் தெரிவித்தார்.


Related Link
திடீர்னு செம்ம மழை - மக்கள் ஜாலி

திடீர்னு செம்ம மழை - மக்கள் ஜால

                       
                   


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
6 hrs 27 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved