தென்காசி மாவட்டம் மேலக்கடையநல்லூரில் உள்ள தாமரைக் குளம் சுடலைமாடசாமி கோவில் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இரவு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும்.அந்த வகையில் இந்தாண்டு திருவிழாவையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு இரவு சிறப்பு பூஜை நடைபெற்றது.முன்னதாக பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்த, சுடலை சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.