கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட மாநில கொள்ளையனை தனிப்படை போலீசார் 8-மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். INDICASH ஏ.டி.எம் மெஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசாரை பார்த்ததும் கொள்ளையன் தப்பியோடியுள்ளான். சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார், கொள்ளையில் ஈடுபட்டது அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுல் அலி என அடையாளம் கண்டு தேடுதலில் இறங்கிய நிலையில் 8-மணி நேரத்தில் கொள்ளையனை பிடித்துள்ளனர். தகவல் கிடைத்த உடனேயே போலீசார் துரித நடவடிக்கையில் இறங்கியதை தொடர்ந்து ஏ.டி.எம் கொள்ளை முறியடிக்கப்பட்டது.