திருப்பூரில் நில பிரச்சனையில், அதிமுக முன்னாள் கவுன்சிலருக்கு மண்டை உடைந்ததால் ரத்தம் சொட்ட சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அண்ணாநகரை சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கந்தசாமிக்கும், அதே பகுதியை சேர்ந்த பிரியா என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், பிரியாவின் கணவர் அசோக் கைது செய்யப்பட்டார்.