Also Watch
Read this
By: Manigandan Raja

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட SSI :
தருமபுரி வெண்ணாம்பட்டி பகுதியை சேர்ந்த சகாதேவன் (55) இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ள நிலையில் இவர் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஏரியூர் பகுதியில் நிலத்தகராறு சம்மந்தமாக பெண் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். அப்பொழுது அவர்கள் இருவருக்கும் தகாத உறவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரது வீட்டிற்கு சென்று வந்த நிலையில் அவரது குழந்தை மீது ஏற்பட்ட விபரீத ஆசையால் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். அப்பொழுது குழந்தை கர்ப்பமான நிலையில் குழந்தையின் தாய் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சகாதேவனை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சகாதேவனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த நிலையில் நேற்று வழக்கிற்காக நீதிமன்றம் சென்று விட்டு திரும்பி உள்ளார். மனமுடைந்த சகாதேவன் இன்று அதிகாலை
ரயில்வே நிலையம் பின்புறம் உள்ள தேக்கு தோப்பு பகுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு காவல் உதவியாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved