Also Watch
Read this
Posted on: Nov 27, 2024 08:43 AM
By: Srini Vasan

குற்றவாளிகளை பிடிப்பதை விட குற்றங்களை நடக்க விடாமல் தடுப்பதே காவல்துறையின் முக்கிய பணி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 3 ஆயிரத்து 359 காவல் துறை, சிறைத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
பின்னர் உரையாற்றிய அவர், தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டு காவல்துறைக்கு இணையானது என பெருமிதம் தெரிவித்தார்.
மேலும், காவலர்கள் கடைநிலை காவலர்களிடமும் நட்பாக பழகிட வேண்டும் என்றும், மக்களுக்கு உங்கள் மீது மரியாதை இருக்க வேண்டுமே தவிர பயம் இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved