ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் நடத்திய சோதனையின் போது, கணக்கில் வராத 2 லட்சத்து 56 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக, சார் பதிவாளர் முத்துகுமார் உள்பட 5 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.