தமிழ்நாட்டில் மக்கள் விரோத மற்றும் தேச விரோத ஆட்சி நடைபெற்று வருவதாக பாஜக மகளிரணி தேசிய தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவை புளியகுளம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்துகள் என கூறினார்.