news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்
tv

Also Watch

tv

Read this

மகள் காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம்

கொல்லமங்கலம், வேலூர்

34

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மனைவியை வீட்டிற்கு அழைத்து வரச்சென்ற கணவர். பாதி வழியில் வழிமறித்த கும்பல் இளைஞரை ஓட ஓட விரட்டி கொன்ற கொடூரம். தலைமறைவாக உள்ள கொலைகார கும்பலை வலைவீசி தேடி வரும் போலீஸ். இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த கும்பல் யார்? பின்னணி என்ன?

கணவனுக்காக மருத்துவமனையில் காத்திருந்த மனைவி
நைட்டு வேலைய முடிச்சுட்டு கணவனுக்காக தனியார் மருத்துவமனை வாசல்ல நின்னு வெயிட் பண்ணிட்டு இருந்துருக்காங்க மனைவி. ஆனா கணவன் ரொம்ப நேரமாகியும் வரல. இதனால கணவன் ராகவனுக்கு ஃபோன் பண்ணி பாத்துருக்காங்க. ரொம்ப நேரமா ரிங் போய்ருக்கு. ஆனா ரெஸ்பான்ஸ் இல்ல. இதனால பதற்றமடைஞ்ச அந்தப் பெண் தன்னோட கணவனுக்கு தொடர்ந்து ஃபோன் பண்ணி பாத்துருக்காங்க. அப்ப அந்த ஃபோன எடுத்த மற்றொரு நபர், ரயில்வே பாலத்துல இளைஞர் ஒருத்தரு ரோட்ல கத்திக்குத்து காயங்களோட அடிப்பட்டு கிடக்குறாரு, ஃபோன் ரோட்ல கிடந்துச்சு, அதான் நான் எடுத்து பேசுனேன்னு சொல்லிருக்காரு. இதனால அதிர்ச்சியடைஞ்ச மனைவி உடனே சம்பவம் நடந்த இடத்துக்கு போய்ருக்காங்க. இந்த விஷயத்த கேள்விப்பட்டு ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ், ராகவன மீட்டு ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வச்சாங்க. ஆனா அங்க அவர பரிசோதித்த டாக்டர், ராகவன் உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க. இதனால போலீசார் மனைவி ஸ்வேதா கிட்ட விசாரணை பண்ணிருக்காங்க. உங்க கணவருக்கு யார் கூடயாவது முன்பகை இருக்கா, எதனால உங்க கணவனுக்கு இப்படி ஆச்சு? உங்களுக்கு யார் மேலையாவது சந்தேகம் இருக்கான்னு? கேட்ருக்காங்க. அப்ப அவங்க சொன்ன பதில் தான் வழக்கையே திருப்பி போட்ருக்கு.

திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண் வீட்டார்
வேலூர்ல உள்ள பள்ளிகொண்டா கொல்லமங்கலம் பகுதிய சேந்த ராகவனும், அதே பகுதியை சேந்த ஸ்வேதா-ங்குற பெண்ணும் காதலிச்சுட்டு இருந்தாங்க. ரெண்டு பேரும் ஒரே சமூகமா இருந்தாலும், ஸ்வேதாவோட குடும்பத்த விட, ராகவனோட குடும்பத்தினர் பொருளாதார ரீதியா பின்தங்கி இருந்ததால இந்த கல்யாணத்துக்கு பெண் வீட்டார் சம்மதம் தெரிவிக்கல. இதனால ஸ்வேதா தன்னோட தந்தை கிட்ட, ராகவன் வீட்ல வசதி வாய்ப்பு இல்லனாலும், அவன் ரொம்ப நல்லவன், என்னை நல்லபடியா பாத்துப்பான்னு சொல்லிருக்காங்க. ஆனா பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவிச்சுருக்காங்க. இதனால ராகவனும் ஸ்வேதாவும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 2022ஆம் ஆண்டுல கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க.

தற்போதுவரை குழந்தை இல்லை என தகவல்
ராகவன் விவசாயம் பண்ணிட்டு இருந்தாரு. மனைவி ஸ்வேதா தனியார் மருத்துவமனையில நர்ஸா வேலை பாத்துட்டு இருந்தாங்க. இந்த தம்பதிக்கு இப்ப வர குழந்தை இல்லன்னு கூறப்படுது. மகள் தன்னோட பேச்ச மீறி ராகவன திருமணம் பண்ணிக்கிட்டத தெரிஞ்சு கடும் கோபமான பெண்ணோட தந்தை அமுல்ராஜ், ராகவன் கிட்ட தொடர்ந்து சண்டை போட்டுட்டே இருந்துருக்காரு. இதனால மருமகன் மாமனாருக்கு இடையில முன்பகை ஏற்பட்டிருக்கு. கொஞ்சம் நாட்களுக்கு முன்னாடி மறுபடியும் மருமகனோட வீட்டுக்கு போன அமுல் ராஜ், ராகவனையும் தனது மகளையும் தகாத வார்த்தையால திட்டிருக்காரு. மாமனாரோட செயல கண்டு கடும் கோபமடைஞ்சு ராகவன், பதிலுக்கு சண்டை போட ஆரம்பிச்சுருக்காரு.

மாமனாரை தகாத வார்த்தைகளால் திட்டிய ராகவன்
அப்ப ராகவன் மாமனார தகாத வார்த்தையால திட்ட ரெண்டு பேருக்கு இடையில வாக்குவாதம் அதிகமாகிருக்கு. இதபாத்த அங்கருந்த மக்கள் ரெண்டு பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி விட்ருக்காங்க. ஆனா கோபத்துடன் வீட்டுக்கு போன அமுல்ராஜ், தன்னோட நண்பர்கள் கிட்ட நடந்த எல்லாத்தையும் சொல்லி ராகவன கொலை பண்ண திட்டம் போட்ருக்காரு. அதுபடி தன்னோட மனைவிய கூப்ட பைக்ல தனியார் மருத்துவமனைக்கு போய்ட்டு இருந்தாரு ராகவன். அப்ப ரயில்வே பாலத்துல வச்சு, அவர வழிமறிச்ச ஒரு கும்பல், ராகவன இரும்பு ராடால தாக்கியும், கத்தியால குத்திருக்காங்க. இதுல நிலைகுலைந்த ராகவன் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு. அதுக்கடுத்து அந்த கொலைக்கார கும்பல் அங்கருந்து தப்பிச்சு போய்ட்டாங்க. ராகவனோட மனைவி ஸ்வேதா மூலமா எல்லா உண்மையையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ், தலைமறைவாக இருக்குற மாமனார் உள்ளிட்ட கொலையாளிகள வலைவீசி தேடிட்டு இருக்காங்க.

Related Link
தவெகவினர் மீது தாக்குதல் - திடீர் ட்விஸ்ட்

தவெகவினர் மீது தாக்குதல் - திடீர் ட்விஸ்ட்

             

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
1 hr 21 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved