Also Watch
Read this
Posted on: Feb 08, 2026 11:38 AM
By: Manigandan Raja

அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம் :
திண்டுக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே 5-வது நாளாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின்
கூட்டமைப்பு சார்பில் தினந்தோறும் பல்வேறு போராட்டங்களில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
இன்று 5 வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான சத்துணவு அங்கன்வாடி பணியாளர்கள் கையில் திருவோடு ஏந்தி . கஞ்சி காய்ச்சி போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மேலும் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி படி அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்களுக்கு வருவாய் கிராம உதவியாளர்களுக்கு வழங்குவது போல் சிறப்பு பென்ஷன் அகவிலைப்படி வழங்கவேண்டும்.
இளநிலை உதவியாளர்கள் நிலையில் ரூ.19,500 அடிப்படை காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். சமையலர், சமையல் உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் ரூ.1,500 அடிப்படை காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.
குழந்தைகள் நலன் கருதி அங்கன்வாடி மையங்களுக்கு மே மாதம் முழுவதும் கோடை விடுமுறை வழங்கவேண்டும் என கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
போராட்டத்தில் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் அதிமுக மாநில பொருளாளரும்முன்னாள் அமைச்சருமான திண்டுக்கல் சி சீனிவாசன் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அங்கன்வாடி பணியாளர்களிடம் நேரில் சந்தித்து உங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படக்கூடிய கோரிக்கைகளாக உள்ளன.
அடுத்து அதிமுக ஆட்சி தான் வர உள்ளது. எனவே அதிமுக ஆட்சி வந்தவுடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும் என்று போராட்டம் நடத்திக் கொண்டிருந்த அங்கன்வாடி பணியாளர்களுக்கு வாக்குறுதி அளித்தார்.
உடன் வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் அங்கன்வாடி மாவட்ட பொறுப்பாளர் தமிழ்ச்செல்வி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved