news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா
tv

Also Watch

tv

Read this

அங்காளம்மன் கோயில் மயான கொள்ளை திருவிழா

கள்ளக்குறிச்சி

17

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
koil 3

உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள ரகுநாதபுரம் கிராமத்தில் அங்காளம்மன் மயான கொள்ளை திருவிழாவில் காளி, கருப்பு காளி பாவாடை ராயன் சிவப்பு காளி காட்டாரி அம்மன், குறத்தி, பெரியாயி உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு பூசாரிகளுடன் சேர்ந்து பகதர்களும் ஆக்ரோஷமாக சாமியாடினர். பின்னர் இடுகாட்டில் மண்ணால் செய்யப்பட்ட எல்லை பிடாரி அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு, கொழுக்கட்டை, சுண்டல், பொரிகடலை வைத்து பக்தர்கள் வழிபட்டனர்.


அங்காளம்மன் கோயிலின் மயான கொள்ளை திருவிழா
உளுந்தூர்பேட்டை அருகே ரகுநாதபுரம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலின் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடைபெற்ற மயான கொள்ளை திருவிழாவில் பூசாரிகள் கோவிலில் இருந்து காட்டேரி, காளி, பாவாடைராயன், பிடாரி, சிவப்பு காளி, கருப்பு காட்டேரி, குறத்தி, பெரியாயி, அங்காளம்மன் உள்ளிட்ட பல்வேறு வேடமிட்டு சாமி ஆடியப்படி இடுகாட்டிற்குச் சென்றனர்.

ஆவேசமாக சாமி ஆடிய பக்தர்கள்
அப்போது சாமி வருகைக்காக காத்திருந்த பக்தர்கள் மேள தாளங்கள் அடித்ததால் அதற்கு ஏற்றார் போல் பக்தர்களும் ஆவேசமாக சாமி ஆடியதால் பார்ப்பவர்களை மெய்சிலர்க்க வைத்தது தொடர்ந்து சுடுகாட்டுக்குச் சென்ற சாமி ஆடிகள் மண்ணால் செய்யப்பட்ட எல்லை பிடாரி அம்மனுக்கு ஆடு, கோழி பலியிட்டு, கொழுக்கட்டை, சுண்டல், பொரிகடலை வைத்து படையலிட்டனர்.

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம்
அப்போது அங்கு படையிலிட்ட பொருள்களை சாமி ஆடி ஆக்ரோஷத்துடன் சூறை இட்டபோது பக்தர்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற கரகோஷத்துடன் பக்தி பரவசத்தில் இருந்தனர். இவ்விழாவில் கிளியூர், குன்னத்தூர், நத்தாமூர், எதலவாடி, நெய்வனை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நினைத்த காரியம் நிறைவேற வேண்டுதல்
பக்தர்கள் குழந்தை வரம் வேண்டியும், திருமணம் நடைபெற வேண்டியும், நினைத்த காரியம் நிறைவேற வேண்டியும் தீய சக்தி விலகவும் சாலையில் விழுந்து சாமியை தரிசனம் செய்தனர். அப்பொழுது அவர்கள் மீது ஏறி சாமியாடி வந்தவர்கள் நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Related Link
திருச்சப்பர சிறப்பு பூஜை

திருச்சப்பர சிறப்பு பூஜை


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாரம்பரிய முறைப்படி நடந்த வெற்றிலை பிரி திருவிழா

0
8 hrs 12 mins agoshare
Mdu vetrilai








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved