தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பழமையான கருப்பூர் கலம்காரி ஓவியம் தொடர்பான பயிற்சிப் பட்டறையில் 2 திருநங்கைகள் உட்பட 60 பேர் கலந்துகொண்டனர். இந்த வாய்ப்பு திருநங்கைகளுக்கு கிடைத்த வரப்பிரசாதம் எனவும், இந்த ஓவியத்தை திருநங்கைகள் மத்தியில் கொண்டு சேர்க்க உள்ளதாகவும் பயிற்சியில் பங்கேற்ற திருநங்கைகள் கஜோல், சகுந்தலா தேவி ஆகியோர் கூறினர்.