சென்னையில், நேற்று சராசரியாக 15 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார். சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் செய்தியாளர் சந்திப்பில் இதனை கூறினார். எண்ணூரில் 26 சென்டி மீட்டர், பாரிமுனையில் 25 சென்டி மீட்டர், ஐஸ் ஹவுஸில் 22 சென்டி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக கூறியவர் சென்னையில் மட்டும் 330 பேர் கொண்ட 11 NDRF குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக கூறினார். வாய்க்கால்களை தூர் வாராததால் தான் பயிர்கள் சேதமடைந்துள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டுக்கு, அவர் அரசியலுக்காக பேசுவதாக கூறியவர், எந்த அரசாக இருந்தாலும் தூர் வாரும் பணி நடைபெறும் என்றும், அதில் எண்ணிக்கை கூட குறைய இருக்குமே தவிர தூர் வாரும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார். இதையும் பாருங்கள் - எழிலகத்தில் ஆய்வு செய்தபின் அமைச்சர் பரபரப்பு பிரஸ்மீட் |Minister KKSSR Ramachandran Pressmeet