நாமக்கல் மாவட்டம், வெப்படை அருகே அதிவேகமாக வந்த கார் சாலையின் குறுக்கே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.சங்ககிரியை சேர்ந்த சக்திவேல், ஈரோடு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்த போது விபத்தில் சிக்கினார். தடுப்பு சுவரில் மோதி கார் தூக்கி வீசப்பட்டதில் சக்திவேலின் கால்கள் முறிந்தன.