தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பல்லவராயன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள், ஓணம் பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு பூக்கள் அறுவடையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.பல்லவராயன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்யும் மல்லிகை பூக்களை நேரடியாக கேரளாவிற்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்.இந்நிலையில் ஓணம் பண்டிகை தொடங்குவதை முன்னிட்டு அறுவடை பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வரும் விவசாயிகள், கடந்தாண்டு போல இந்தாண்டும் கிலோவிற்கு 3500 ரூபாய் வரை பூக்கள் விலை போனால் தங்களுக்கு மகிழ்ச்சி என தெரிவிக்கின்றனர்.