பல்லடத்தில் விவசாய தோட்டத்தில் குடியிருந்த 3 பேர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, கோவை மாவட்டத்தில் விவசாய தோட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வீடுகள், தோட்டத்து சாலைகளில் சிசிடிவி கேமரா பொருத்துமாறும், வெளியூருக்கு செல்லும் பட்சத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்குமாறும் கூறினர்.