திமுகவில் மட்டுமின்றி, அதிமுகவிலும் குடும்ப அரசியல் இருக்கிறது என்று, முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார்.இதுகுறித்து செங்கோட்டையன் கூறி இருப்பதாவது:எம்ஜிஆர் காலத்தில் இருந்து, நான் ஒரே நிலைப்பாட்டில் தான் இருந்து வருகிறேன். இப்போது வருகின்ற பிரச்சினைகளை, ஒன்றன்பின் ஒன்றாக பார்க்கும்போது, திமுகவில் மட்டும் குடும்ப அரசியல் இல்லை. அதிமுகவிலும் இபிஎஸ் மகன், மைத்துனர், மாப்பிள்ளை போன்றவர்கள் தலையீடு இருக்கிறது என்பது நாடு அறிந்த உண்மையாகிறது.இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும், நாளை வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கோடு, நான் பணிகளை மேற்கொண்டு வருகிறேன். தன்னால் முடியாததை, முடியும் என்று சொல்லி, தன்னையும் ஏமாற்றிக் கொண்டு, மற்றவர்களையும் ஏமாற்றக்கூடாது என்பது தான் தத்துவம்.இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.இதையும் பாருங்கள் - "போறபோக்கில் அதிமுகவில் புது குண்டை தூக்கி போட்ட KAS" பகீர் பேட்டி | Sengottaiayan Pressmeet | EPS