நந்தன் திரைப்படத்தை பார்த்தால் மனிதனை மனிதனாக மதிக்க தோன்றும் என்று நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார். சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான நந்தன் திரைப்படத்தை படக்குழுவினர் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் ரசிகர்களுடன் பார்த்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சசிகுமார், தற்போது உள்ள பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசியுள்ளதாக கூறினார்.