முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்ற தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தொகுதியில், வருகிற தேர்தலுக்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது. சிட்டிங் திமுக எம்.எல்.ஏ.வுக்கு எதிராக, அக்கட்சி எம்.பி. தங்க தமிழ்ச் செல்வனே காய் நகர்த்தி வருவதால் உட்கட்சி பூசலும் தலை விரித்தாடுகிறது. புதிய வரவாக வந்திருக்கும் தமிழக வெற்றிக் கழகமும் ஆண்டிப்பட்டி தொகுதியில் வலுவான வேட்பாளரை நிறுத்த முடிவு செய்திருக்கும் நிலையில், ஆண்டிப்பட்டி தொகுதி நிலவரம் என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. 9 முறை அதிமுக வெற்றி வாகை தமிழ்நாட்டிலுள்ள நட்சத்திர தொகுதிகளின் பட்டியலில் ஆண்டிப்பட்டி தவறாமல் இடம்பெற்றிருக்கும். மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் போட்டியிட்ட ஆண்டிப்பட்டி தொகுதி, கிட்டத்தட்ட அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. இடைத்தேர்தல் உட்பட ஆண்டிப்பட்டி தொகுதியில் 9 முறை அதிமுக வெற்றி வாகை சூடியிருக்கும் நிலையில், கடந்த 2019 தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் கோட்டை என்பது தகர்க்கப்பட்டு, ஆண்டிப்பட்டி தொகுதி திமுக வசம் சென்றது. திமுக வேட்பாளராக, மகாராஜனுக்கே சீட்டு 2019 இடைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற மகாராஜன், 2021 தேர்தலிலும் வெற்றிக் கொடி நாட்டினார். இந்த நிலையில், வருகிற தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதி யார் வசமாகும் என்ற எதிர்பார்ப்பு தற்போதே எழுந்துள்ளது. ஆண்டிப்பட்டி தொகுதியில் முக்குலத்தோர் சமூகத்தினர் தான் பெரும்பான்மையாக வசித்து வரும் நிலையில், தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக முக்குலத்தோர் சமூக வாக்குகள் தான் இருக்கின்றன. ஆகவே, வருகிற தேர்தலிலும் திமுக வேட்பாளராக, மகாராஜனுக்கே சீட்டு கிடைக்க வாய்ப்பு என பேசிக் கொள்ளப்படுகிறது. தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதிஆண்டிப்பட்டி தொகுதி மக்களின் பிரதான கோரிக்கையே, குடிநீர் பிரச்சனையை சரி செய்வது தான் என்ற நிலையில், எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற மகாராஜன், குடிநீர் பிரச்சனையை சரி செய்ய புதிய ஆழ்துளைக் கிணறுகள், மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் அமைத்துக் கொடுத்தது தொகுதி மக்கள் மத்தியில் நல்ல பெயர் சம்பாதிக்க காரணமாக பார்க்கப்படுகிறது. அது போக, கிராமப்புற சாலைகளை மேம்படுத்தியது, அரசுப் பள்ளிகளை மேம்படுத்தியது உள்ளிட்ட பணிகளும் தொகுதி மக்களிடையே நல்ல அபிப்ராயத்தை கொடுத்துள்ளது. இருப்பினும், தேர்தலின் போது அளித்த முக்கிய வாக்குறுதியான, முல்லை பெரியாறு அணையில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்படும் என்ற திட்டம் இதுவரை வெறும் அறிவிப்பாகவே நீடிக்கிறது. மகனை களம் இறக்கும் தங்க தமிழ்ச்செல்வன்இது ஒரு பக்கம் இருந்தாலும், எம்.எல்.ஏ. மகாராஜனுக்கு எதிராக அவரது சொந்த கட்சியிலேயே உட்கட்சி பூசலும் தலைவிரித்தாடுகிறதாம். எம்.எல்.ஏ.வாக இருக்கும் மகாராஜனுக்கும், அதிமுகவில் இருந்து திமுகவில் ஐக்கியமான தங்க தமிழ்ச் செல்வனுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருக்கிறது. பொது மேடைகளிலேயே இருவரும் வசைபாடிக் கொண்ட நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கும் நிலையில், எம்.பி. தங்க தமிழ் செல்வனை திமுக தலைமை கண்டித்தும் வைத்தது. பாரம்பரியமாக திமுகவில் மகாராஜன் இருந்து வரும் நிலையில், இடையில் வந்து தங்க தமிழ் செல்வன் ஆதிக்கம் காட்டுவது இருவருக்கும் இடையே முரண்பாடு உருவாக காரணமாக அமைந்தது. எம்.எல்.ஏ. மகாராஜனுக்கு எதிராக வருகிற தேர்தலில் தனது மகன் நிஷாந்தை களமிறக்க தங்க தமிழ் செல்வன் காய் நகர்த்தி வருகிறார் என சொல்லப்படுகிறது. மகனுக்கு சீட்டு கேட்டு தலைமைக்கு தூது அனுப்பியிருக்கும் தங்க தமிழ் செல்வன், கட்சி நிகழ்ச்சிகளுக்கு மகனை அழைத்துச் செல்வதில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.அதிமுக கூட்டணியில் யாருக்கு?திமுகவில் சூழல் இப்படி என்றால், அதிமுகவிலும் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு அடிதடி நடக்கிறதாம். திமுக எம்.எல்.ஏ. மகாராஜனின் தம்பி லோகிராஜன் அதிமுகவில் இருந்து வரும் நிலையில், அண்ணனுக்கு எதிராக தம்பி லோகிராஜன் களமிறங்க தீவிரமாக காய் நகர்த்தி வருகிறார். ஏற்கனவே, இரண்டு முறை அண்ணன் மகாராஜனுக்கு எதிராக போட்டியிட்டு தோற்றுப் போன லோகிராஜன், வருகிற தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார். ஆனால், லோகிராஜனுக்கு எதிராக அதிமுகவிலேயே முருக்கோட்டை ராமரும் சீட்டு கேட்டு முறுக்கி வருவதால் யாருக்கு சீட்டு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அமமுகவுக்கு, ஆண்டிப்பட்டி தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்பு என சொல்லப்படுகிறது. திமுக, அதிமுக, தவெகபுதியதாக அரசியலில் எண்ட்ரீ ஆகியிருக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் லெஃப்ட் பாண்டியும் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட காய் நகர்த்தி வருவதால், போட்டி இன்னும் கடுமையாகியுள்ளது. ஆகவே ஆண்டிப்பட்டி தொகுதியில் வெல்வது ஆளும் கட்சி திமுகவா? அல்லது அதிமுகவா? அல்லது த.வெ.க.வா? என்பது மக்களின் கைகளில் தான் இருக்கிறது. Related Link கோவையில் BJP வைக்கும் குறி, சம்மதிக்குமா ADMK?