கரூர் மாவட்டம், கூலிநாயக்கனூர் கிராமத்திற்குள் முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன், டிரவுசர் கொள்ளையர்கள் சுற்றித் திரியும் சிசிடிவி காட்சி வெளியாகி, கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து டிரவுசர் கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. முகமூடி அணிந்து கையில் உருட்டுக் கட்டையுடன் ஊருக்குள் நுழைந்த டிரவுசன் கொள்ளையர்கள், மாரப்பன் என்பவரது வீட்டிற்குள் புகுந்து, வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அவரது மனைவியின் கழுத்திலிருந்து ஐந்தரை சவரன் செயினை பறித்து சென்றதாக கூறப்படுகிறது.இதையும் பாருங்கள் - பாம்பு போல கடைக்குள் ஊர்ந்து கைவரிசை, திருட்டு சம்பவத்தின் பரபரப்பு சிசிடிவி | Bakery Shop | Theft