Also Watch
Read this
By: Fyrose Banu

திருவிடைமருதூர் தாலுக்கா, அணைக்கரை அருகே தத்துவாஞ்சேரி பகுதியில் நேஷனல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்கள் பெங்களூரில் நடந்த தேசிய அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியடைந்தனர்.

ஐந்தாம் வகுப்பு மாணவன் சாய் நிவேதன் சுபாஷ் முதலிடத்தையும், பிரதிவேகன், இரண்டாம் இடத்தையும் பெற்றனர். பரிசுகளை வென்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் மற்றும் ஆசிரியர்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் உற்சாக வரவேற்பளித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved