தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள சடையாண்டி கோயிலில் 105 கிடாக்கள் வெட்டப்பட்டு, ஆண்கள் மட்டுமே பங்கேற்ற விநோத திருவிழா நடைபெற்றது. டி.அணைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள கோயிலில், ஜப்பசி மாத திருவிழா நள்ளிரவு தொடங்கி, விடிய விடிய நடைபெற்றது. 150 கிடாக்கள் வெட்டப்பட்டு, சுவாமிக்கு படையிலிடப்பட்டு பின்னர் ஆண்களுக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது. இதில் டி.அணைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள் பங்கேற்றனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள டி.அணைக்கரைப்பட்டி கிராமத்தில், சடையாண்டி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் திருவிழா கொண்டாடப்படுகிறது. நள்ளிரவில் கொண்டாடப்படும் இந்த திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்பது ஐதீகம். இந்த அசைவ விருந்தில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பங்கேற்று உணவருந்தினர். ஆண்கள் மட்டுமே பங்கேற்ற சடையாண்டி கோயிலில், விடிய விடிய அசைவ விருந்து வழங்கப்பட்ட சம்பவம், தேனி மாவட்டம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.