தேனி மாவட்டம் கூடலூரில் ஓடும் பேருந்தில் இருந்து இறங்கிய மாணவன் தவறி விழுந்து படுகாயம் அடைந்ததன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தும் மாணவன் யுவராஜ், அரசு பேருந்தில் பயணித்த போது பள்ளிக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிற்பதற்கு முன்பாகவே இறங்கியதாக தெரிகிறது.அப்போது கால் இடறி தலைக்குப்புற கவிழ்ந்து விழுந்ததில் படுகாயம் அடைந்த மாணவனை அக்கம் பக்கத்தினர் மீட்டு, தேனி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.