விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலையில் தறிக்கெட்டு ஓடிய தனியார் பேருந்து, மின் கம்பம் மீது மோதி நின்றது. செண்டர் மீடியனை இடித்துச் சென்ற பேருந்து, அங்கிருந்த மின் கம்பத்தின் மீது மோதியதன் சிசிடிவி காட்சி வெளியானது. பேருந்து மோதி மின் கம்பம் சேதமடைந்ததால், அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.