Also Watch
Read this
Posted on: Apr 25, 2025 12:25 PM
By: Srini Vasan

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே பெண்களை கேலி செய்தது குறித்து காவல்நிலையத்தில் புகாரளித்த நபரை வெட்டிக் கொலை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பாட்டகுளம் பகுதியை சேர்ந்த லாரன்ஸ் அடிக்கடி பெண்களை கேலி செய்து வந்ததை, அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் தட்டிக்கேட்டதோடு, மேலும் சிலருடன் இணைந்து காவல்நிலையத்தில் புகாரளித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த லாரன்ஸ் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த முருகனை வெட்டிக் கொலை செய்தார்.
இவ்வழக்கில் தீர்ப்பளித்த மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிமன்றம், லாரன்ஸுக்கு ஆயுள் தண்டனையும், ஐந்தாயிரம் அபராதமும் விதித்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved